அவனின் கழிவறை
அவனின் கழிவறை சாரதி . ஆத்திர அவசரத்துக்கு வந்தே தொலையாது. அடுத்து அடுத்து வேலை இருக்கு. இதுல போய் உட்கார்ந்திட்டு. இவ்வளவுக்கும் ரெண்டு தடவை டீ குடிச்சாச்சு. நாலு தடவை வாக்கிங் போயாச்சு. எல்லாம் நடந்த பிறகும் சின்ன அசைவு கூட இல்லை. நமக்கு எந்த பிரச்சனைதான் அசையுது. எல்லாம் அப்படி அப்படி நிற்கிறது. சரி ஒவ்வொரு பிரச்சனையாகவே முடியட்டும். இப்பொழுது முக்கியமானது, சின்ன பிள்ளைக்கு காலேஜ் பீஸ் கட்டணும். அது முடிஞ்சா கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். பணத்தை ஓரளவுக்கு பிறட்டியாச்சி. ஒரு நாற்பதாயிரம் ரூபாய் கிடைக்க மாட்டேங்குது. என்னன்னு தெரியல. இப்படி இருந்ததேயில்லை. கேட்டவங்கல்லாம் கையை விரிச்சிட்டாங்க. காலையில் நாராயணன் வரச்சொல்லியிருக்கான். அவனிடம் இது வரை கேட்டதே இல்லை. அவனிடம் கேட்பதற...