Posts

Showing posts from April, 2020

துர்ஷினியின் பிரவேசம் (இது ஒரு ஆன்ட்ராய்டு கதை)

        துர்ஷினியின் பிரவேசம்                                   (இது ஒரு ஆன்ட்ராய்டு கதை)                      சாரதி இப்படியெல்லாம் நடக்குமா? நம்பவே முடியவில்லை. ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும். காற்றை விட வேகவேகமாக செய்திகள் பரவியது. முதலில் யாருக்கும் தெரியாமல்தான் இருந்தது. ஆனாலும் இப்படியொரு செய்தி எப்படி தெரியாமல் போகும்.. எப்படி வெளி வராமல் இருக்கும். ஒரு நாள், செய்தி வெளி வரத்தான் செய்தது. உலகமே வியந்தது. யார்தான் இந்த செய்தியை முதலில் சொன்னார்கள் என்ற பேச்சுக்கு இடமே இல்லாமல் போய்விட்டது. அவளுக்கும் அவள் கணவனுக்கும், எல்லாரும் அவர்களை வேடிக்கைப் பொருளாகப் பார்த்தது முதலில் கோபமும் அழுகையுமாகத்தான் வந்தது. நாளாக நாளாக அதுவே அவர்களுக்கு பெருமையானது.   இதற்கெல்லாம் காரணம் துர்ஷினியின் பிறப்புதான். துர்ஷினி பிறந்ததே ஒரு விநோதம்தான். துர்ஷினி பிறந்த அன்றையதினம் ஆச்சரியமான நிகழ்வுக்கான எந்தவொரு அறிகுறிகளும் வானத்தில் தென்படவில்லை. ஆனாலும் அன்றைய தினம்தான் துர்ஷினி பிறந்தாள். பத்து மாதம் மூன்று நாளில் மே ஏழாந்தேதி குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கணித்திருந்தார்க