Posts

Showing posts from January, 2020

கண்ணாடியுள் கசிந்துருகும் இசையின் வர்ணங்கள்

Image
கண்ணாடியுள் கசிந்துருகும் இசையின் வர்ணங்கள்      சாரதி   அது ஒரு ஆச்சரியமான இரவு என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இரவு வருவதற்கு முன்பே தெரிந்து விட்டது. இன்று வரப்போகும் அபூர்வ இரவுக்கான அறிகுறிகள். மாலையிலிருந்தே இதமான ஒரு இனிமையான காற்று வீசியது. சாதரண காற்று என்றுதான் முதலில் நினைத்தான்.   நேரம் ஆக ஆக காற்றின் சப்தமே ஒரு இசையாக மாறியது. அதுவும் மூங்கில் காற்றின் மேக நடனத்தில் தவழும் விநோத இசையாகவே மாறியது.   அந்த விநோத இசை எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. காற்றுதான் எப்பேற்பட்ட இசையையும் எங்கிருந்தெல்லாமோ தன் வானில் தவழ்ந்து வரும் நட்சத்திர ஒளிக்கீற்றின் வழியே கொண்டு வந்து விடுமே.. ஆனால், அப்படியெல்லாம்கூட யூகிக்க முடியாத வகையில் இசைத்தது. இப்படியொரு இசை, கண்ணாடிக்குள்ளிருந்து வந்திருக்கிறது என்றால் ஆச்சரியமானதாக இருக்கிறது.   இசைக்கும் கண்ணாடிகள் உலகில் இருக்கவா செய்கிறது. அப்படியென்றாலும் இவைகளுள் எந்தக் கண்ணாடிதான் அப்படி இசைக்கிறது என்பதை கண்டறிவது கடினம்தான். ஒன்றும் புரியவில்லையே. தாத்தா கூட இப்படியொரு இசையைப் பற்றி சொல்லவில்லையே. ஒருவேளை, எந்த விநோதங