Posts

Showing posts from September, 2019

இணக்கம்

இணக்கம்                                                                                              சாரதி      சாந்தாவுக்கு திருமணம் உறுதியாகிவிட்டது. அவள் அம்மா அதற்காக வேண்டாத தெய்வமில்லை. போகாத கோயில் இல்லை. சாந்தா பல நேரம் வயிற்று வலி, ரத்தப்போக்குன்னு வீட்டில் முடங்கி விடுவாள். சிலசமயம் கண்முழி மேலேறிக்கொண்டு மயங்கியே விழுந்து விடுவாள். இது விசயமாக கைப்பக்குவத்திலிருந்து, நல்ல லேடி டாக்டர் வரைக்கும் பார்த்தாகிவிட்டது.   எல்லாரும் சொன்ன ஒரே பதில் அவளுக்கு கல்யாணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும். அதைத்தான் அவள் பாட்டியும்   சொன்னாள். சாந்தாவிற்கு திருமணமானால் தாம்பத்யத்தில் வயிறு வலி, ரத்தப்போக்கு, தீட்டு எல்லாம் சரியாகி விடும் என்று அவள்   குடும்பமே முடிவெடுத்தது.     சாந்தாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகளெல்லாம் விறுவிறுப்பானது. அன்றைக்குத்தான் திருமணம். ஆனால், அன்று காலையிலிருந்தே சாந்தாவுக்கு காய்ச்சல்,   பயம்,   பதட்டம்.   அவள் அம்மா, பாட்டி, வேணி அக்கா, சிநேகிதி கல்பனா எல்லாருமே அவளருகிலிருந்து பயத்தையும் பதட்டத்தையும் போக்க பேசி தைரியமாக்கி கொண்டேயிருந்தா

யாசகம்

   யாசகம்                      சாரதி                    அவன் நல்லசிவன் வீட்டு காம்பவுண்ட்டில் நின்றிருந்தான். கீழிருந்து மாடியைப் பார்த்தான். மாடியில் ஆள் நடமாட்டம் தெரிந்தது.   காம்பவுண்ட் கதவின் முன் நின்று வீட்டுக்குள் பார்த்தான். வீட்டைச்சுற்றி குரோட்டன்ஸ் செடிகளும், தாள்ப்பூ செடிகளும் இருந்தது. ஒரு நிமிடம் தயங்கினான். காம்பவுண்ட் கதவை திறந்து கொண்டு நல்லசிவன் பெயரைச் சொல்லி அழைத்தான். அவன் அழைப்பு நிச்சயம் கேட்டிருக்காது. அவனுக்கு சத்தமான குரலில் அழைப்பதற்கான எந்த தெம்பும் உடம்பில் இல்லை.   நல்லசிவன் வீட்டுக்குள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. அது நல்லசிவன் வீடுதான் என்ற உரிமையோடு அந்த வீட்டின் மாடிப்படியில் ஏறியபடியே, மறுபடியும் நல்லசிவன்.....என உயிரைப் பிடித்துக் கொண்டு சத்தமாக அழைத்தான்.   இந்தமுறை அவன் அழைப்பு கேட்டிருக்க வேண்டும்.   “அவங்க ஆபீஸ் முடிந்து பஜாருக்கு போயிட்டுதான் வருவாங்க….” அவன் மனைவி வனஜா குரல் மாதிரிதான் இருந்தது. ஆம்… அவளே தான்.   இவனைப் பார்த்ததும் சற்று தயங்கி, பயந்து நின்றாள். அதன்பின் “வாங்க…” என்றாள்.   அவள் அழைப்பில் சுரத்து இல்லை.