Posts

Showing posts from August, 2018
விசித்திர நாட்காட்டியின் கண்ணாடிக்குள் என் தாத்தா                   அவன் தாத்தாவின் தாத்தா காலத்தில் கட்டிய புராதன வீடு . எந்த திசையில் இருந்து பார்த்தாலும்   விநோதமாகவே தெரியும் . அந்த எட்டு தட்டு வீட்டில் தாத்தாவுக்கு ஆறாவது அறை . அது ஒரு அபூர்வமானஅறை . அன்றைக்கு வீட்டில் அம்மாவை தவிர யாரும் இல்லை . அவளும் மூன்றாம் தட்டில் தூங்கியிருந்தாள் . வானில் நிலவு இல்லை . இருட்டுக்குள் வீடு இருந்தது . மறுபடியும் , அந்த அறையின் உள்ளே செல்ல கதவின் பக்கம் நின்றிருந்தான் . அதுதான் கடைசி இருள் . கதவில் செதுக்கப்பட்ட சித்திரங்கள் கருஇருளில் நீள நிறத்தில் விநோதமாய் தெரிந்தது . சித்திரங்களின் விந்தையில் மயிர்கால்கள் குத்திட்டன . மூச்சு நின்று விடும் போலிருந்தது . வார்த்தைகளின் விளிம்பில் வார்த்தைகளற்று நின்றிருந்தான் . தூரத்தில் அம்மா .. அம்மா …..... என்றான் . நாக்கு உள் இழுத்துக்கொண்டது . கண்களைமூடவும் முடியவில்லை . திறக்கவும் முடியவில்லை . கண் இமைக்கும் நேரத்தில் திறந்த கதவு அவனை உள்ளே இழுத்துக்கொண்டது .                  

தெக்கூர் செல்லும் கருப்பு ரயில்வண்டி

அவர்கள் இரண்டு பேருக்கும் இப்படியொருநிலைமை இதற்கு முன் வந்ததில்லை. அவர்கள் ரயில்வே பிளாட்பாரத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். நான்கு ஜோடி ரயில் தண்டவாளங்களை கடந்த பின்புதான் அந்த ரயிலை அடைய முடியும். அது வடக்கூருக்கு போகும் ரயில். ரயில் செல்ல தயாரான நிலையில் இருந்தது. அந்த இருவரும் வேகவேகமாக நடந்தார்கள். முதுமையை மீற முடியாமலும், இடது கண் அறுவை சிகிச்சை பண்ணியதால், கண்ணில் கருப்புக்கண்ணாடியுடனும்அந்த தாய்அவன் கையை பிடித்து நடந்து வந்தார். அவர்களை கடந்து பலபேர்அவசரமாக சென்று கொண்டிருந்தனர். அக்கினி நட்சத்திரவெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. தண்டவாளங்களில் வெயில் பட்டு தெரித்து, அவர்கள் முகத்தில் அறைந்தது. அவள் கண்களில் பசி மயக்கம் தெரிந்தது. அடிக்கும் வெயிலையும் மீறி கையை நெற்றியில் கண்களுக்கு மறைப்பு கொடுத்து பார்த்தான். ரயில் பக்கத்தில்தான் தெரிந்தது. அவன் கை அம்மாவின்கையை இறுக்கியது.அதில் நம்பிக்கை தெரிந்தது. ரயிலில் கூட்ட நெருக்கடி அவ்வளவாக இல்லை. அவர்கள் அமர்ந்திருந்தது ரயிலின் கடைசிப்பெட்டி. ரயில்வண்டி கிளம்ப ஆரம்பித்தது. தூரத்தில் கேட்ட இஞ்சின் சப்தம் பையப்பைய நகன்ற