விசித்திர நாட்காட்டியின் கண்ணாடிக்குள் என் தாத்தா
                 
அவன் தாத்தாவின் தாத்தா காலத்தில் கட்டிய புராதன வீடு. எந்த திசையில் இருந்து பார்த்தாலும்  விநோதமாகவே தெரியும். அந்த எட்டு தட்டு வீட்டில் தாத்தாவுக்கு ஆறாவது அறை. அது ஒரு அபூர்வமானஅறை. அன்றைக்கு வீட்டில் அம்மாவை தவிர யாரும் இல்லை. அவளும் மூன்றாம் தட்டில் தூங்கியிருந்தாள்.வானில் நிலவு இல்லை. இருட்டுக்குள் வீடு இருந்தது. மறுபடியும், அந்த அறையின் உள்ளே செல்ல கதவின் பக்கம் நின்றிருந்தான். அதுதான் கடைசி இருள்.கதவில் செதுக்கப்பட்ட சித்திரங்கள் கருஇருளில் நீள நிறத்தில் விநோதமாய் தெரிந்தது. சித்திரங்களின் விந்தையில் மயிர்கால்கள் குத்திட்டன. மூச்சு நின்று விடும் போலிருந்தது. வார்த்தைகளின் விளிம்பில் வார்த்தைகளற்று நின்றிருந்தான். தூரத்தில் அம்மா..அம்மா…..... என்றான். நாக்கு உள் இழுத்துக்கொண்டது. கண்களைமூடவும் முடியவில்லை.திறக்கவும் முடியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் திறந்த கதவு அவனை உள்ளே இழுத்துக்கொண்டது.

                       கண்களை திறந்தான். சூனியமாய் இருந்தது. தூரத்தில் மங்கலான மஞ்சள் ஒளி. விஸ்தாரமான அறை.மூன்று திசையிலும் எதுவுமற்ற வெளி. கிழக்கு திசையின் மூலையில் பியோனா வடிவில் நீண்ட மேசை இருந்தது. அதன் அருகில் ஒரு லாந்தர் விளக்கில் சிறிது வெளிச்சம். மேசையின் மேல் சிறிய நீளமான மரப்பேழை. அது செஞ்சி மலைக்கலைஞனின் வேலைப்பாட்டினாலானது. அதன் அருகில் சிறிய மரச்சாவி. அறையின் நிசப்தத்தில் செவிட்டுக்கோழியின் சத்தம் மட்டும் வந்து வந்து போனது. மனம் பதைபதைத்தது. முகம் வியர்த்துக்கொட்டியது. மேசையின் அருகில் கையை கொண்டு சென்றான். நடுக்கத்துடன் சாவியை எடுத்தான். பேழையின் துவாரத்தில் சாவியை நுழைத்ததும் மூங்கில் காற்றின் இசைச்சத்தத்தில் பேழை  ஒரு அழகிய பாடலாய்  மனதை வருடி திறந்தது. தீயாய் ஒளிக்கற்றை கண்ணை பறித்தது. தங்க நிறத்தில் பேனா ஒன்று எழுந்து நின்றது. அப்படியே இருகிப்போய் நின்றான். என்னதான் நடக்கிறது. அது என்ன பேனா? இப்படியொரு பேனா பற்றி யாருக்கும் தெரியாது. தாத்தாவும் யாரிடமும் சொல்லியதாக தெரியவில்லை. தாத்தா பேசிய வார்த்தைகளே குறைவு. கடைசிகாலத்தில் அதுவும் இல்லை. தாத்தாவின் அளவு கடந்த நேசத்துக்குரிய அவனிடம் கூட பேசுவதை நிறுத்திவிட்டார். சாப்பாடு, தண்ணீர் எல்லாம் அந்த அறைக்குள்தான். ஒரு நேரத்தில் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. அனைவருமே பயந்து விட்டார்கள். முடிவாக ஒரு நாள் கதவை உடைத்து தாத்தாவை வெளியில் கொண்டு வர முடிவு செய்தார்கள். கடப்பாரையோடு கதவுக்கு முன் நின்று கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் அந்த சம்பவம் நடந்தது. திடீரென்று கதவு பலத்த சத்தத்துடன் திறந்தது. தாத்தா பொத்தென்று வாசலில் விழுந்தார். அனைவருமே பதறிப்போனார்கள். தாத்தாவை கட்டிலில் கிடத்தினார்கள். வீடே அமைதியானதுசாவின் விளிம்பிலிருந்த தாத்தா அவனை அழைத்து திக்கித்தினறி கூறிய கடைசி வார்த்தை வந்து போனது. 
காத்திரு. உனக்கான காலம் வரும்.”

                 அவன் அதிர்ந்து போனான். அறையை சுற்றும் முற்றும் பார்த்தான். சுவர் முழுவதும் தாத்தாவின் கண்கள். கண் இமைக்காமல் அவனையே பார்த்தது. தங்க நிறத்தில் மின்னிய அந்த பேனாவின்  மூடியில் வரையப்பட்ட சீன ஓவியத்தாலான பறக்கும் குதிரை அவனை பெயர் சொல்லி  அபரிஜித்என அழைத்தது. அப்படியொரு  பெயர் அவன் அம்மாவைத்தவிர யாருக்கும் தெரியாது. அவன் கண்கள் பிரகாசமானது. விரல்கள் பேனாவை வருடியது.  வருடிய நிமிடத்தில், அவன் பார்த்திருக்க அறைக்குள் ஒளிந்திருந்த விசித்திர நாட்காட்டியும், விநோத கண்ணாடியும் அறையின் எதிர்எதிர் திசையில் வந்தமர்ந்தது. பேனாவின் மூடியை திருக, தானாகவே பேனா சுழன்றது. பேனாவின் சுழற்சியில் திடீரென்று பூமியின் வர்ணஜாலம் வீட்டின் மேற்கூரை வழியே கசிந்து உருகி பியோனா மேசை மேல் வடிந்த சனத்தில் பீத்தோவானின் இசை அறை முழுவதும் பரவ, காற்றுக்குள் வெள்ளை நிறக்காகிதமாய் உருமாறி மேசையின் மேல் விரிந்தது. அவன் வலது கையின் விரல்களுக்கிடையில் லாவகமாய் எழுதுவதற்கு ஏதுவாக தங்கப்பேனா தயாரனது. பேனாவின் முனை, கூர் வடிவில் கருநீலநிற மையை நேர்த்தியாக,சீராக வெளியேற்ற தோதுவானது.  அந்த காகிதத்தின் மேல் பேனா முனையால்என்று எழுத ,    பேனா அவன் விரல்களை எழுத்தால் நகர்த்தியது. வெள்ளைக்காகிதத்தில் எழுத்து, வட்டவடிவமாய் , எழுத்தின் வார்த்தைகளாய்காடுகள,; காட்டுவிலங்குகள், காட்டுமனிதர்கள், காட்டின் மலைகள்,காட்டு ஆறுகள்”...வார்த்தை வரிகள் உருவமாகி விநோத கண்ணாடிக்குள் கால தூரத்திலிருந்து வெளிவந்த வெண்புகை அறைமுழுவதும் பரவ,உள்ளிருந்து வெளிவந்த ஆல மரம் இரண்டாகி, உள்ளே தூரதூரமாய் சென்றது காட்டுவெளி. வெளியின் இருபுறமும் வனாந்திர மலைகள், காட்டு விலங்குகளின் ஓங்கார சப்தம், வில் அம்புகளுடன் வனாந்திர மனிதர்கள்,அழகிய குழந்தைகள், அம்மணமாய் பெண்கள், கொம்பு முளைத்த ஆண்கள்....கண்ணாடியே காடாகி, ஆல விழுதுகள் கண்ணாடியின் விளிம்பினை தொடும் போது பேனாவினை மூடி விட்டான்நிசப்தம் ஆனது.
 பேனாவின் அதிசயம் அவனை பிரமிக்க வைத்தது.

                     இம்முறை பேனாவால் எழுத ஆரம்பிக்கும் முன் கை விரல்கள் நடுங்கியது. விரல்களை பிடித்துக்கொண்என்று எழுதினான். விரல்களை மீறி எழுத்துக்கள்  பிரவாகமெடுத்து, திசையெங்கும் மோதி பின் விரல்களின் வழியே வரிகளற்ற வார்த்தைகளாய் நகன்று முடிவில்சரித்திரம், சத்தியம், சந்திரன், சித்திரம், சங்கீதம்.....” வார்த்தைகள் உருவெடுத்த போது நாட்காட்டி வேக வேகமாக பின்னோக்கி நகர, ஆதி நாட்காட்டியின் விளிம்பில்  நின்றிருப்பது வெள்ளைவால்குருவி என விசித்திர கண்ணாடிக்குள் தெரிய ஆரம்பித்தது. வெள்ளைவால்குருவி அசாதரமானது என தாத்தா சொல்லியிருக்கிறார்.   வெள்ளைவால் குருவி எந்த திசையிலும்,எந்த பக்கமும்,எவ்வளவு காலமானாலும் களைப்பே இல்லாமல் நேராகவோ, தலைகீழாகவோ பறக்கும், நினைத்த மாத்திரத்தில் மறையும்,வேறு வேறாய் உருமாறும். வெள்ளை வால் குருவி பூமி அதிர ஆடியது. கலிநடனம் புரிந்தது. அசுர வேகத்தில் வட்ட வடிவமாய் சுழன்றது. அதன் சுழற்சியின் வேகத்தில் நாட்காட்டியின் எண்கள் நூறு ஆண்டுகள் பின்னோக்கி நகன்றது. திடீரென்று கண்ணாடிக்குள் கால தூரத்திலிருந்து நூறு நூறு குதிரைகளின் குழம்பொலி சப்தம், சிப்பாய்களின் வாளின் ஓசை,வீரர்களின் மரண ஓலங்களிலிருந்து ஆயிரம் ஆயிரம் வீரர்கள்,வீதிகளில் ஓங்;கிய தூப்பாக்கிகளின் குரல்கள், ரத்தம், ஆறுகள்,மலைகள், கருத்த வானம், இருண்ட வீடுகள், தெருக்களில் அலறிய சத்தத்துடன் மனிதர்கள் வேக வேகமாய் நகர, கண்ணாடியின் சுற்றுப்பட்டையினை தொடும் போது பேனா அவன் கை விரல்களைவிட்டு வெகு தூரம் பறந்து சென்றிருந்தது. பேனாவினை பியானோவின் இசைவரிகளாய் பின் தொடர்ந்தான். பேனா, ஒளி வேகத்தில் பறந்து கொண்டிருந்த வெள்ளைவால்குருவியின் வாயில் உள்ள மரப்பேழையில் வைத்திருப்பது கண்ணாடியில் தெரிய வந்தது. நாட்காட்டியின்படி கண்ணாடிக்குள் காற்றின்பாடல் காலத்தை மாற்றியது. காலம் மாற மாற கண்ணாடியே பாதையாய் விரிந்தது

                       அது வனாந்திர நீள் வெளிப்பாதை. அவன், வெள்ளைவால்குருவி வாயிலிருந்த பேழையை நோக்கி விரைந்தான். அந்த வனாந்திர வெளியில் ஈரக்காற்றும் அனலாகியது. மணல் வெளியில் விரிந்து கிடந்த ரத்தம் படிந்த சரளைக்கற்களில் ஓடி, அதைப்பிடிப்பது கடினமான காரியம்தான். ஆனாலும் பிடித்தே ஆக வேண்டும். வெள்ளைவால்குருவி;, இப்போது கருப்பு மலையில் சித்தர்களின் பாதப் பதிவின் மேல், கனவுப்பாதையில் கண்ணிமைக்கும் நேரத்தில்  மறைந்து மறைந்து பறந்துகொண்டிருந்தது. இது வரை  யாரும் கண்டிராத அளவு ஒளி வெள்ளம் அந்த மலையை சுற்றிய கிராமத்தை கடந்த போது, கண் இமைக்கும் நேரத்தில் வந்து போனது.

       நீலநிற ஆற்றை கடந்துதான் நகரத்தை அடைய வேண்டும். அபூர்வ ஆற்றின் பாடல், வானத்தில் தவழ்ந்து செல்லும் வெள்ளைவால்குருவியின் திசையின் சோகத்தை உணர்த்தியது. திசையெங்கும் பரவிய இசை மோனம், வேறு வேறு காலத்தின் இசை பிரம்மத்தை உசுப்பியது.

               வெள்ளைவால்குருவியை  எங்கும் காணவில்லை. தூரத்தில்  இருண்ட கட்டிடம் . நீண்ட பாதையில் குறைந்த ஒளியில் அகன்ற நுழைவாயில். உள்ளடங்கிய அறுபத்து நான்கு அறைகள். ஆழ்ந்த அமைதியில் வெள்ளைவால்குருவி மாயமாய் மறைந்தது புரியாமல் மதி மயங்கி நின்றான்.அவன் காலடிசப்தத்தின் அதிர்வில் ,பூமிக்குள் மறைந்த யுகாந்திர மனிதர்கள் தன் கதைகளின் சாகசங்களை காற்றாய் சொன்னார்கள.;  நாற்பத்துமூன்றாவது அறையின் முன் எரிந்த லாந்தர் விளக்கு அவன் கண்ணுக்குள் மங்கலாய் மினுங்கியது.

             அறையின் முன் நின்று பார்த்தான். மஞ்சள் நிற வெளிச்சத்தில்  வட்ட வடிவ மேஜை முன்பு நடுவகிடு தரித்த ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரின் மூக்கு கண்ணாடிக்குள், கண்கள் பிரகாசமாய் இருந்தது. கால பிம்பங்களின் நீட்சியில் மௌன வார்த்தைகளில் பறவைகளின் வாசகத்தை தூரத்தில் உச்சரித்துக் கொண்டிருந்தார்.அவர் கதர்ஜிப்பாவும் ,வெள்ளைநிற வேட்டியும் அணிந்திருந்தார். மேஜையின் மேலிருந்த புத்தகத்திலிருந்து செந்நிற வார்த்தைகள் யுகங்களாய் கண்ணாடிக்குள் நுழைந்து கொண்டிருந்தது. அவர் எதிரில் சச்சதுர மேஜையில் திப்புவின் தட்டச்சு எந்திரம், விசித்திர சத்தத்தில் வெள்ளைத்தாள்களுடன் பேசியது. அவர் தலைக்கு மேல் மாட்டப்பட்ட போட்டோ பிரேமுக்குள் தாடி மனிதரின் பிரகாசமான கண்களில் அமீபாவிற்கு முந்தைய ஆதி கடாட்சமும் தெரிந்தது. பக்கத்தில் இருளின் மௌனத்தில் கோடுகளாய் நெளிந்து நெளிந்து விரிந்த பூமியின் தேசக்கணிதத்தின் அற்புத உயிர் ஒவியம்அவனை சுட்டெரித்தது அவரின் கண்கள்கண்களில் தெரிந்த வார்த்தைகளும் கேள்விகளும் காலம் மாறி அவனை வந்தடைந்தது.

 காலத்தின் வரிகள்
 காலத்தின் வார்த்தைகள்
 கால பிரம்மங்கள்
சூரிய நிழலின் வருடலில்
குழந்தையின் சிரிப்பின்
கசிந்துருகும் அழகிய ஓவியம்

     அந்த வரிகளுக்குள், அவன் குதிரை வேகத்தில் பின்னோக்கி  தூர தூரமாய் நகர, நிகழ்வுகளாய் அவனுக்குள் மாறிய அவன் பார்த்துக்கொண்டிருக்க கண்ணாடியுள், வார்த்தைகளிலிருந்து தெரித்த ஒளிக்கீற்று பேனாவின் முனை வழியே; நாட்காட்டிக்குள் படர்ந்தது.
      
       பளிச்சென்ற சொல்ல முடியாத வெளிச்சத்துடன் அவன் கண் முன்னே வெள்ளைவால்குருவி பறந்து, இருண்ட கட்டிடத்தின் வாசல் வழியே வெளியேறியது;. கருமணலின் மகுடியிலிருந்து புறப்பட்ட விந்தை எழுத்துக்கள் விநோத நகரில்; , கோடான கோடி நாட்களின் கால பிம்பங்களில் காலமற்ற முகம் கண்ணாடிக்குள்ளும், முகமற்ற காலம் நாட்காட்டிக்குள்ளும் கேள்வியாய் மாறி மாறி மறைந்தது.                 

Comments

Popular posts from this blog

துர்ஷினியின் பிரவேசம் (இது ஒரு ஆன்ட்ராய்டு கதை)

அவனின் கழிவறை