Posts

துர்ஷினியின் பிரவேசம் (இது ஒரு ஆன்ட்ராய்டு கதை)

        துர்ஷினியின் பிரவேசம்                                   (இது ஒரு ஆன்ட்ராய்டு கதை)                      சாரதி இப்படியெல்லாம் நடக்குமா? நம்பவே முடியவில்லை. ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும். காற்றை விட வேகவேகமாக செய்திகள் பரவியது. முதலில் யாருக்கும் தெரியாமல்தான் இருந்தது. ஆனாலும் இப்படியொரு செய்தி எப்படி தெரியாமல் போகும்.. எப்படி வெளி வராமல் இருக்கும். ஒரு நாள், செய்தி வெளி வரத்தான் செய்தது. உலகமே வியந்தது. யார்தான் இந்த செய்தியை முதலில் சொன்னார்கள் என்ற பேச்சுக்கு இடமே இல்லாமல் போய்விட்டது. அவளுக்கும் அவள் கணவனுக்கும், எல்லாரும் அவர்களை வேடிக்கைப் பொருளாகப் பார்த்தது முதலில் கோபமும் அழுகையுமாகத்தான் வந்தது. நாளாக நாளாக அதுவே அவர்களுக்கு பெருமையானது.   இதற்கெல்லாம் காரணம் துர்ஷினியின் பிறப்புதான். துர்ஷினி பிறந்ததே ஒரு விநோதம்தான். துர்ஷினி பிறந்த அன்றையதினம் ஆச்சரியமான நிகழ்வுக்கான எந்தவொரு அறிகுறிகளும் வானத்தில் தென்படவில்லை. ஆனாலும் அன்றைய தினம்தான் துர்ஷினி பிறந்தாள். பத்து மாதம் மூன்று நாளில் மே ஏழாந்தேதி குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கணித்திருந்தார்க

கண்ணாடியுள் கசிந்துருகும் இசையின் வர்ணங்கள்

Image
கண்ணாடியுள் கசிந்துருகும் இசையின் வர்ணங்கள்      சாரதி   அது ஒரு ஆச்சரியமான இரவு என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இரவு வருவதற்கு முன்பே தெரிந்து விட்டது. இன்று வரப்போகும் அபூர்வ இரவுக்கான அறிகுறிகள். மாலையிலிருந்தே இதமான ஒரு இனிமையான காற்று வீசியது. சாதரண காற்று என்றுதான் முதலில் நினைத்தான்.   நேரம் ஆக ஆக காற்றின் சப்தமே ஒரு இசையாக மாறியது. அதுவும் மூங்கில் காற்றின் மேக நடனத்தில் தவழும் விநோத இசையாகவே மாறியது.   அந்த விநோத இசை எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. காற்றுதான் எப்பேற்பட்ட இசையையும் எங்கிருந்தெல்லாமோ தன் வானில் தவழ்ந்து வரும் நட்சத்திர ஒளிக்கீற்றின் வழியே கொண்டு வந்து விடுமே.. ஆனால், அப்படியெல்லாம்கூட யூகிக்க முடியாத வகையில் இசைத்தது. இப்படியொரு இசை, கண்ணாடிக்குள்ளிருந்து வந்திருக்கிறது என்றால் ஆச்சரியமானதாக இருக்கிறது.   இசைக்கும் கண்ணாடிகள் உலகில் இருக்கவா செய்கிறது. அப்படியென்றாலும் இவைகளுள் எந்தக் கண்ணாடிதான் அப்படி இசைக்கிறது என்பதை கண்டறிவது கடினம்தான். ஒன்றும் புரியவில்லையே. தாத்தா கூட இப்படியொரு இசையைப் பற்றி சொல்லவில்லையே. ஒருவேளை, எந்த விநோதங

அவனின் கழிவறை

Image
அவனின் கழிவறை                               சாரதி     .     ஆத்திர அவசரத்துக்கு வந்தே தொலையாது. அடுத்து அடுத்து வேலை இருக்கு.   இதுல போய் உட்கார்ந்திட்டு. இவ்வளவுக்கும் ரெண்டு தடவை டீ குடிச்சாச்சு.   நாலு தடவை வாக்கிங் போயாச்சு.   எல்லாம் நடந்த பிறகும் சின்ன அசைவு கூட இல்லை.   நமக்கு எந்த பிரச்சனைதான் அசையுது.   எல்லாம் அப்படி அப்படி நிற்கிறது.   சரி ஒவ்வொரு பிரச்சனையாகவே முடியட்டும்.   இப்பொழுது முக்கியமானது, சின்ன பிள்ளைக்கு காலேஜ் பீஸ் கட்டணும்.   அது முடிஞ்சா கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். பணத்தை ஓரளவுக்கு பிறட்டியாச்சி.   ஒரு நாற்பதாயிரம் ரூபாய் கிடைக்க மாட்டேங்குது.   என்னன்னு தெரியல.   இப்படி இருந்ததேயில்லை. கேட்டவங்கல்லாம் கையை விரிச்சிட்டாங்க.   காலையில் நாராயணன் வரச்சொல்லியிருக்கான்.   அவனிடம் இது வரை கேட்டதே இல்லை. அவனிடம் கேட்பதற்கு எப்பமும் ஒரு யோசனையாகத்தான் இருக்கும். அதனால், அவனிடம் கேட்காமலேயே பல வழிகளில் சமாளித்து விடுவான்.   ஆனால், இப்பொழுது நிலைமை அப்படி இல்லை. அவனை பார்த்தால்தான் எப்படியும் கதை தேறும். ஏற்கனவே அவனிடம் கைபேசியில் பேசிவிட்டான்.